மேகமூட்டம்... மிதமான மழை...! கடலோர தமிழகத்தில் வானிலை மாற்றம்...! - சென்னை வானிலை அப்டேட் - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன.
04-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காத்திருக்கலாம். அதிகாலை வேளையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படலாம்.


05-01-2026 & 06-01-2026: கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; உள் தமிழகத்தில் வறண்ட வானிலை தொடரும். அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
குறைந்தபட்ச வெப்பநிலை:
04-01-2026 முதல் 07-01-2026 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை சில இடங்களில் 2-3°C வரை குறையக்கூடும், இயல்பை விட குளிரான நிலை நிலவலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:
இன்று: வானம் ஓரளவு மேகமூட்டம்; அதிகாலை லேசான பனிமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை: 29-30°C, குறைந்தபட்சம்: 22°C.
நாளை: வானம் மேகமூட்டம்; அதிகாலை லேசான பனிமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை: 30°C, குறைந்தபட்சம்: 22-23°C.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cloudy skies moderate rain Weather change coastal Tamil Nadu Chennai weather update


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->