தமிழகத்தின் இந்த இரு மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை.! - Seithipunal
Seithipunal


இந்திய வானிலை ஆய்வு துறையின், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வட தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை என்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

30.08.2021 : நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

 கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பொழிவு : சத்தியபாமா பல்கலை (செங்கல்பட்டு), அவலாஞ்சி (நீலகிரி) தலா 9 செண்டி மீட்டர். குறைந்தபட்ச மழை அளவு : பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) , ஏற்காடு (சேலம்) தலா 1 சென்டிமீட்டர். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை : இன்று வங்ககடல் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் . மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இன்று மற்றும் நாளை அரபிக்கடல் பகுதிகளான கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டா மென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு., 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI IMD REPORT AUG 29


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->