குடையுடன் ரெடியா இருங்க! 9 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்
Be ready with an umbrella Thunderstorms and lightning likely in 9 districts Meteorological Department
சென்னை வானிலை மையம் அறிக்கை படி,தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில், இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் அறிவித்துள்ளதாவது,"வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை,பெரம்பலூர்,அரியலூர், திருவாரூர், நாகபட்டினம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
Be ready with an umbrella Thunderstorms and lightning likely in 9 districts Meteorological Department