அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது "புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி"...! வானிலை மையம் - Seithipunal
Seithipunal


அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மிகத் தீவிர பிபோர்ஜாய் புயலாக கடந்த 15ஆம் தேதி மாண்டிவி (குஜராத்) மற்றும் சுராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஐக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடந்தது. இதனால் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், தற்பொழுது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் டலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A new low pressure area is forming over the Bay of Bengal in the next 24 hours


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->