வானில் சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம்! 'அகல்வட்டம் பகல் மழை' - ஆனந்த அதிர்ச்சியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில், சூரியனை சுற்றிலும் ஏற்பட்ட ஒளிவட்டம் தென்பட்டது. இதனை பார்த்த மக்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்களும் இதனை கண்டு களித்தனர்.

அக்னி நட்சத்திரம் மறைந்து நாட்கள் பல கடந்தாலும், மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடுமையான வெயிலின் காரணமாக, அன்றாட வேலைகளை கடினமாக உணர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 11 லிருந்து 12 மணிக்கு வானில் திடிரென சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றியது. கிட்டதட்ட ஒருமணி நேரம் வானில் தெரிந்த அந்த வட்டத்தை மக்கள் குழந்தைகள் என அனைவரும் பார்த்து வியந்தனர். 

இதைப்பற்றி வானியல் வல்லுனர்கள்என்ன சொல்கிறார்கள் என்றால், இந்த வட்டத்தின் பெயர் ஆண்டிலியா ஆகும். வானில் மழை மேகங்கள் ஒரு நிலையில் பனிக்கட்டிகளாக மாறும். அப்போது, அதன் மீது சூரிய ஒளி படும் போது, ஒளிவட்டமாக பிரதிபலிக்கும், இதை அறிவியலில் ஒளிவிலகல் எண் எனவும், கூறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

'அகல்வட்டம் பகல் மழை' என்பது பழமொழி, இவ்வாறு வானில் ஒளிவட்டம் தோன்றினால், உடனே எங்கள் ஊரில் மழை பெய்யும், என்று கூறி பூரிப்படைகின்றனர் அந்த பகுதி மக்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன், திருப்புவனம் சுற்றிய அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. ஆனால் அந்த ஊரில் மட்டும் மழை பெய்யவில்லை. கோடை வெயிலில் தவித்து வரும் மக்களுக்கு, வானில் தோன்றிய இந்த ஒளிவட்டம் மழை பெய்யும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A halo around the sun in the sky


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->