தமிழகத்துக்கு 48 மணி நேர ‘ஆரஞ்சு அலர்ட்’! அதிகாரிகள் அவசர கூட்டத்தில் தீவிர கண்காணிப்பு
48 hour Orange Alert Tamil Nadu Officials hold emergency meeting monitor closely
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகி, தொடர்ந்து சக்தி சேர்த்துக் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு–வடமேற்கு திசையில் வேகமாக நகரும் என ஊகிக்கப்படுகிறது. இதன் தாக்கமாக, தமிழகத்தை அடுத்த இரு நாட்கள் கனமழை முதல் மிக கனமழை வரை தாக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் உச்ச எச்சரிக்கை – ஆரஞ்சு அலர்ட் – விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
கடலோர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில்
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில்
புதுவை – காரைக்கால் பகுதிகளில்
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.மேலும், தாழ்வு மண்டலத்தின் வலிமை காரணமாக –
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் – கன முதல் மிக கனமழை
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் & புதுவை – கனமழை
இந்த எச்சரிக்கையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அடுத்த 48 மணி நேரம் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.
English Summary
48 hour Orange Alert Tamil Nadu Officials hold emergency meeting monitor closely