உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழகத்தின் மழை பெய்யப் போகும் மாவட்டங்கள்.!!
16 dec rain in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் வரும் 19ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவ காற்று காரணமாக தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.