10 குட்டிகளுடன் இளைஞரின் காதில் குடியிருந்த கரப்பான் பூச்சி.! அதிர்ச்சியான வீடியோ.! - Seithipunal
Seithipunal


காதுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே அதிர்ச்சியில் உறையும் அளவுக்கு, காதின் உள்ளே கரப்பான் பூச்சி குடும்பத்துடன் குடியிருந்துள்ளது.

சீனா ஹுயாங் பகுதியில் வசித்து வருபவர் லிவ். 24 வயதாகும் இவருக்கு கடுமையான காதுவலி இருந்துள்ளது. வலி மட்டுமில்லாமல் காதுக்குள் ஏதோ அசைவு இருப்பதை உணர்ந்த அவர், தனது பெற்றோர்களிடம் காதுக்குள் எதாவது இருக்கிறதா என பார்க்க கூறியுள்ளார். அவரது பெற்றோர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதையடுத்து வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமணையில் அவரது காதை பரிசோதனை செய்த மருத்துவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, அவரது காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளோடு இருந்துள்ளது. 

இதையடுத்து, உடனடியாக ஒவ்வொரு கரப்பான் பூச்சியாக கருவி மூலம் மருத்துவர் வெளியே எடுத்துள்ளார். 10 குட்டிகளையும் வெளியே எடுத்துவிட்டாலும், தாய் கரப்பான் பூச்சியை லிவ் காதிலிருந்து அகற்றுவதில் மருத்துவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், களிம்பு வைத்து காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் தாய் கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். லிவ் தினமும் சாப்பிட்ட பின் மீதி உள்ள உணவை தனது படுக்கையறையிலே வைத்துள்ளார். அந்த உணவை சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் அவரது காதுக்குள் சென்றிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cockroach lives in young boy ear


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal