வாட்ஸ்அப் பயனர்களுக்கு பேரிடி...! இந்த பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் இனி கிடையாது...! - ஏன் தெரியுமா...? - Seithipunal
Seithipunal


பழமையான ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப் சேவை, ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கும் நோக்கில், ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய பதிப்புகள் இனி இந்த சேவைக்கு தகுதியற்றதாக மாற்றப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

புதிய பாதுகாப்பு முறைகள் மற்றும் கூடுதல் வசதிகளை ஆதரிக்க, பழைய மென்பொருள் மற்றும் கருவி அமைப்புகள் போதுமான வலிமையற்றவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்து பயனர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், தங்களின் உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்கள் இழக்கப்படாமல் இருக்க, விரைவில் புதிய இயங்குதள பதிப்புகளுக்கு மேம்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த மாற்றம், நவீன தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு கட்டாய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WhatsApp users trouble WhatsApp no longer available these old model phones Do you know why


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->