200MP பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்! விலை ? சிறப்பு அம்சம்கள்! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் வெளியிட்டது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் முக்கியமாக 50MP பிரைமரி கேமரா உடன் வருவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது உயர் தரமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய சிறப்பம்சத்தை கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் வெளியிடப்படும் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதற்காக சாம்சங் ISOCLLL HP3 கேமரா சென்சார் பயன்படுத்தப்படும். 200MP கேமரா மூலம் மேலும் மேம்பட்ட புகைப்பட எடுப்புகள் மற்றும் விரிவான விவரங்களுடன் புகைப்படங்கள் எடுக்க முடியும்.

இந்த தகவல்களின் படி, சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் 50MP கேமரா மட்டுமே வழங்கப்படும், ஆனால் சர்வதேச மாடல்களில் கேமரா தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல்கள் எந்த மாற்றமும் இல்லாமல் 50MP கேமராவுடனே வழங்கப்படும் என்று சியோமி கூறியுள்ளது.

சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் 200MP கேமரா கொண்ட ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல்கள், பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Redmi Note14 Pro Series Launched With 200MP Primary Camera


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->