விரைவில் விற்பனைக்கு வரும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ரியல்மி வாட்ச்! - Seithipunal
Seithipunal


ரியல்மி நிறுவனம் அதன் புதிய ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மி வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரிய்லமி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ரியல்மி வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை - ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

* ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலில் 1.78 இன்ச் 368x448 பிக்சல் டச் கலர் AMOLED ஸ்கிரீன், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வளைந்த டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

* இத்துடன்  3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், SpO2 லெவல் மற்றும் 24 மணி நேர ரியல்டைம் ஹார்ட் ரேட் லெவல் வழங்கப்பட்டுள்ளது.

* மேலும், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் குவாலிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

* இதில் 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் 345 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

* ப்ளூடூத் 5.3 ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் டூயல் மோட் ப்ளூடூத் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

* லோ ஹார்ட் ரேட் ரிமைண்டர் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் வானிலை விவரங்கள் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

* இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில், மல்டி சிஸ்டம் ஜிபிஎஸ் மற்றும் 345 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

* ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் கிரே மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

* இதன் விற்பனை செப்டம்பர் 9-ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Realme watch with Bluetooth calling feature introduced


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->