அசத்தல் அப்டேட் உடன் ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!  - Seithipunal
Seithipunal


ரியல்மி நிறுவனம் இந்தியாவில் இந்தாண்டு துவக்கத்தில் ரியல்மி 9i 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. 

ரியல்மி 7 சீரிஸ் மாடலில் மிரர் டிசைன், ரியல்மி 8 சீரிசில் டைனமிக் லைட் டிசைன் மற்றும் ரியல்மி 9 சீரிசில் ரிப்பில் ஹாலோகிராபிக் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இதே பிராசஸர் கொண்டு ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய 5ஜி போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. 

புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் FHD+ LCD ஸ்கிரீன் மற்றும் 5000 mAh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Realme 9i 5G smartphone launched


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->