உங்கள் மின் சேவை துண்டிக்கப்படும்.. உஷார்.. பல கோடி மோசடி.!  - Seithipunal
Seithipunal


நாட்டில் மின் வாரிய சேவை தரப்பில் இருந்து மெசேஜ் அனுப்பப்படுவதாக கூறி ஒரு புதிய மோசடி அரங்கேறி வருகின்றது. 

தற்போது மொபைல் ஆப் மூலமாகவே மின்சார கட்டணத்தை நாம் செலுத்தி விட முடியும். நாம் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் கூட நமக்கு மின் வாரியத்தின் சார்பாக எந்த விதமான எச்சரிக்கையும் செல்போனில் கொடுக்கப்படுவது இல்லை.

மாறாக மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து தான் மின்சார சேவையை துண்டிக்கின்றனர். இப்படி இருக்கையில் பலரது செல்போன்களுக்கு, ''நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. எனவே இன்று இரவு 9:35க்கு மின் சேவை துண்டிக்கப்படும்." என ஒரு மெசேஜ் வந்துள்ளது.

மேலும், இந்த மெசேஜில் தொடர்பு கொள்ளச் சொல்லி ஒரு செல்போன் எண்ணும் கொடுக்கப்படுகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உடனே மக்கள் போன் செய்தபோது, ஜிபே அல்லது போன் பே மூலமாக பணத்தை செலுத்துங்கள் என்று கூறி ஆயிரக்கணக்கில் வாங்கி கோடிக்கணக்கில் கல்லாகட்டி வருகின்றதாம் ஒரு மர்ம கும்பல். 

எனவே, மக்கள் இது போன்ற எஸ்எம்எஸ் வரும்போது பதற்றப்படாமல் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new Online Theft using Name Of EB


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->