சார்ஜ் செய்யும்போது செல்போன் பயன்படுத்தலாமா? சுவிட்ச் ஆன், ஆப்... மின்சாரத்துறை கொடுக்கும் அசத்தல் அறிவுரைகள்! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் தேசிய மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு எப்படி பாதுகாப்பாக மின்சாரம் பயன்படுத்துவது குறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும், இந்த ஆண்டு தேசிய மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம்  கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டு, இன்று ஜூலை 2-ம் தேதியுடன்  முடிவடைகிறது.

இந்த ஆண்டின் தேசிய மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் எப்படி பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் சில உங்களுக்காக..

1) மின்சார சாதனங்களை தண்ணீருக்கு அருகாமையில் பயன்படுத்த கூடாது. 

2) சுவிட்சை ஆப் செய்த பிறகு தான் பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும்.

3) மின்கம்பங்கள் மற்றும் அதன் அருகேயுள்ள மரங்களின் மீது ஏற கூடாது.

4) ஈரமான கைகளுடன் மின் சாதனங்களை உபயோகிக்க கூடாது. 

5) மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்க செய்வதை தவிர்க்க வேண்டும்.

6) மின் பெட்டிகள், கம்பி வேலிகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை  தொடக்கூடாது.

7) அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை எக்காரணத்தைக் கொண்டும் தொடக்கூடாது.

8) எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

9) மின்கம்பிகள் இடத்தில் வேலைசெய்யும் கிரேன்கள் மற்றும் மொபைல் பிளான்ட்களின் அருகில் நிற்க கூடாது.

10) எலக்ட்ரிக்கல் சாக்கெட்டுகளில் பல மின் சாதனங்கள் சொருகுவதை தவிர்க்க வேண்டும்.

11) செல்போனில் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

12) எலக்ட்ரிக்கல் சாக்கெட்டுகளில் விரல்களையோ, அல்லது கம்பிகளையோ விடுவதை தவிர்க்க வேண்டும்.

13) முக்கியமாக மழைக்காலங்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mobile in Charge use and some tips


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->