மின்விசிறியின் வேகத்தை கூட்டினால் மின்சாரம் அதிகமாக செலவழியுமா.?! - Seithipunal
Seithipunal


குளிர்ந்த பானங்கள் அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியுமா?

குளிர்ந்த பானங்கள் அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியாது. நம் உடலின் வெப்பநிலை 36.8°C, 50 கிலோ எடை கொண்ட ஒருவர், தன் உடல் வெப்பநிலையை விட 20°C குறைவான குளிர்பானம் 300 மில்லி லிட்டர் அருந்துவதாகக் கொள்வோம். இதனால் சராசரியாக அவர் வெப்பநிலை 0.1°c தான் குறையும். உயிரோட்டமுள்ள நம் உடலுக்கு இந்த மாதிரியான சராசரி கணக்குப் போடக்கூடாது. குளிர்பானம் அருந்துவதால் தாகம் தணிகிறது.

உடலிலுள்ள நீரானது, வெப்பநிலை உயரும்போது அதிக அளவில் ஆவியாகிறது. அதை ஈடுகட்டுவதற்கான நீர், குளிர்பானம் மூலமாக உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான உப்புச் சத்துக்கள் வியர்வையின் மூலமாக வெளியேறும்போது அதை கட்டுப்படுத்துவற்கான உப்புகளும், உடல் ஆற்றலுக்குத் தேவையான சர்க்கரையும் குளிர்பானத்தின் மூலம் கிடைக்கிறது.

மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும், குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியுமா?

இல்லை, மின்விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு இரண்டு வகையான திருகு சுவிட்சுகள் இருக்கின்றன. பழைய வகை திருகு சுவிட்சில், மின்தடையை கூட்டினால் மின்விசிறியின் வேகம் குறையும். மின்தடையைக் குறைத்தால் மின்விசிறியின் வேகம் கூடும். விசிறி வேகமாக சுற்றும்போது மின்தடையில் குறைவான மின்னாற்றல் விரயமாகும். மெதுவாக சுற்றும்போது மின்தடையில் அதிகமான மின்னாற்றல் விரயமாகும்.

புதுவகை திருகு சுவிட்சில், மின் சில்லைப் பயன்படுத்தி மின்விசிறியின் வேகத்தை கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் மின்விசிறியின் வேகம் மாறும்போது மின்னாற்றல் வீணாவதில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

if fan power increase while fast playing


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->