காதல் தோல்வி: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் காதல் தோல்வியில் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் டிரைவர் ராமச்சந்திரன் (26). இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் தென்காசி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு ராமச்சந்திரனின் பெற்றோர் சென்றனர்.

இதையடுத்து அங்கு பார்த்தபொழுது உயிரிழந்து கிடந்தது ராமச்சந்திரன் என்பது பிரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார், ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 3 வருடங்களாக ராமச்சந்திரன் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறவே ராமச்சந்திரன் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

மேலும் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்த ராமச்சந்திரன், காதல் தோல்வியில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth committed suicide by jumping in front of a train in thenkasi


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal