#சென்னை || கத்தி முனையில் மிரட்டி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது.. !
youth arrested due to Sexually abusing a Woman Chennai
மாணவியை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை குன்றத்தூர் பகுதியில் 22 வயது கல்லூரி மாணவி வசித்து வந்தார். சம்பவதன்று, அவரது வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து தப்பி சென்றார்.
இதுபற்றி அந்த மாணவி தனது சகோதிரியிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித் திரிந்தபோது அந்த வீட்டில் திருட சென்றேன் அப்போது இளம்பெண் இருந்ததால் மனம் மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
இதனை அடுத்து, அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested due to Sexually abusing a Woman Chennai