கள்ளகாதலியுடன் வாழ்வதற்காக இறந்ததாக நாடகமாடிய இளைஞர்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


இறந்து விட்டதாக நாடகமாடி கள்ளக்காதலியுடன் இளைஞர் வசித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் விளையை சேர்ந்தவர் பவித்ரன். கார் மெக்கானிக்கான இவர் கடந்த 24ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் மீன்பிடிக்க செல்வதாக கூறி விட்டு பைக்கில் சென்றுள்ளார். நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் கடைக்குச் சென்று பார்த்தனர்.

 அப்போது அவர் இரு சக்கர வாகனம் செருப்பும் மட்டுமே கடந்து இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மீன்பிடிக்க சென்ற அவரை கடல் அலையில் இழுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதனிடையே திசையன்விளை அருகே உள்ள ராமன்குடி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் மனைவி சாந்தி கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். அவர் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காரும் காணாமல் போனதால் ஒன்றுடம் ஒன்று  தொடர்ப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது, சாந்தியின் செல்போன் மூலம் அவர் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரின் வீட்டிற்கு சென்று பாரத்த போது பவித்ரன் சாந்தி இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை உடனடியாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இரு குடும்பத்தாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது சாந்தி பவித்ரனுடன் வாழ்வதாக கூறினார். மேலும், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளார்.அதற்கு சதீஷ் மறுக்கவே நீதிமன்றத்தை அணுகி மனு செய்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, கணவருடன் செல்லவதாக ஒப்புகொண்டார். இதனை அடுத்து, அவருக்கு அறிவுரை கூறி காவல்துறையினர் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth Acted Death Near Thirunelveli


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->