திருப்பூர் || பொறியியல் பட்டதாரியின் உயிரை பிரித்த ஆன்லைன் சூதாட்டம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் || பொறியியல் பட்டதாரியின் உயிரை பிரித்த ஆன்லைன் சூதாட்டம்.!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் கவின்குமார். பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

இதற்கிடையே ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான கவின்குமார், ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக நண்பர் ஒருவரிடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 

ஆனால், அந்த 3 லட்சம் பணத்தையும் இழந்ததால், கவின்குமார் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் உள்ள குளியலறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைபார்த்த கவின்குமாரின் தம்பி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், கவின்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்து காவல்துறையினர் கவின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பொறியாளர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man died for money loss online game in tirupur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->