ஓபி மதன்: ஐயா., சாமி என்னய விட்டுடுங்க.. தனிப்படை போலீஸின் காலில் விழுந்து கதறல்..! - Seithipunal
Seithipunal


யூடியூபில் மதன் ஒபி, மதன் 18 ப்ளஸ், டாக்சிக் மதன் என்ற பெயரில் சேனல் வைத்துக்கொண்டு, அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து, அதில் ஆபாசமாக பேசி பிரபலமானவன் மதன். தனது மனைவியையே விளையாட்டில் ஈடுபடும் மற்றொரு பெண்மணியாக பேச வைத்து, தனது ஆபாச பேச்சுக்களை ஆதரிக்கும் பெண்ணாக ரசிகர்கள் மத்தியில் நாடகம் ஆடியுள்ளான். 

இதுமட்டுமல்லாது, ஆபாசமாக பேசினாலும் தவறில்லை என்று சிறார்கள் மத்தியில் ஒரு நினைப்பை விதைத்துவிட்டு, இயலாதவர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் பலரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக என கோடிக்கணக்கில் பணம் பறித்து இருக்கிறான். மேலும், இவனது ஆபாச அர்ச்சனையை ஆதரிக்கவே 4 பேர் கொண்ட குழுவும், அவர்களுக்கு மாத ஊதியமும் வழங்கப்பட்டு பார்வையாளர்கள் எதுவும் தவறில்லை என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

தற்போது காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மதன், மதனின் மனைவி, தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதன் தரும் காசுக்கு ஆசைப்பட்டு அவனுக்காக ஆபாசமாக பேசி, அவனது ஆபாச பேச்சுக்களை ஆதரித்து வந்த அவனின் அடிமைகளையும் காவல் துறையினர் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், தர்மபுரியில் உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த ஓபி மதன் காவல் துறையினர் தன்னை சுற்றி வளைந்திருந்த நிலையில், வீட்டின் அறைக்குள் காவல் துறையினரின் காலில் விழுந்து தன்னை விட்டுவிடும்படி கதறி அழுது இருக்கிறான். மேலும், ஆபாசமாக பேசியது ஒரு குற்றமா?. என்னை கைது செய்யாமல் விட்டுவிடுங்கள்., உங்களது காலில் விழுகிறேன் என்று கதறி இருக்கிறான். 

மேலும், என்னை கைது செய்யும் அளவு நான் பெரிய குற்றவாளியெல்லாம் இல்லை. ஆபாசமாக பேசியது குற்றமா?. தெரியாமல் தவறு செய்துவிட்டேன். என்னை விட்டுவிடக்கூடாதா?. என வடிவேல் பாணியில் கதறியுள்ளான். இவனை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர், சென்னை அழைத்து வருகையில், செய்தியாளர்கள் அவனை புகைப்படம் எடுத்தனர். இதன்போது, நான் என்ன பிரதமரா? என்னை ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள்? என செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்ப, நீ குற்றவாளி வா., என்று காவல் உதவி ஆய்வாளர் அழைத்து சென்றார். 

கொஞ்ச நஞ்ச பேச்சா?.. பெண்களை இழிவுபடுத்தி பேசி, அதனை யாரேனும் மரியாதையாக கேட்டால் அவர்களின் காதுகளில் இரத்தம் வரும் அளவு திட்டி, குடும்பம், பரம்பரை என வீதியில் இழுத்து விட்டு, இன்று வீட்டு அறையில் யாரென்றே தெரியாத காவலரின் கால்களில் ஏன் விழ வேண்டும்?.

வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு, இப்ப வந்து வேட்டியில் விட்ட ஓணான் குடைகிறது என்றால் அப்படிதான் இருக்கும். 

இவனது செயல்பாடுகளில் இருந்து மக்களே (சிறார்கள், பதின்ம வயது நபர்கள், இளைஞர்கள்) ஒன்றை மற்றும் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் ஆபாச ஆடியோ, பார்க்கும் ஆபாச வீடியோ, மதனின் லீலை போன்ற பல விஷயங்கள் முழுக்க முழுக்க 97 விழுக்காடு சித்தரிக்கப்பட்டவையே. எஞ்சியுள்ள 3 விழுக்காடு உண்மை. அதையும் மறைக்க இயலாது. இவ்வாறான 100 விழுக்காடு கூட்டமைப்பு அனைத்தும் யாரோ ஒருவரின் பணம் சம்பாரிக்கும் விஷயத்திற்காக நீங்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகிறீர்கள் அல்லது மிரட்டப்படுகிறீர்கள்.. கவனமாக இருங்கள். அற்ப நேர சந்தோசத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையின் பெரும்பகுதியை நரகம் ஆகிவிடாதீர்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You tuber OP Madan begging Officer Do not Arrest Me Officials Says 18 June 2021


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->