வழிப்பறி வழக்கில் பறிமுதல் செய்த பணம் கையாடல் - கையும் களவுமாக சிக்கிய காவல் ஆய்வாளர்.!!
women police inspector transfer to armed force in cuddalore
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள். இவர் நூறு நாள் வேலைக்கு செல்வதற்காக கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் லிப்ட் கொடுத்து அம்மணிம்மாளை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்று அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்து சென்று விட்டார்.
இதனால் கதறி அழுத்த அம்மணியம்மாள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகைபறித்த இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆனால் இந்த சம்பவத்தில் இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டு வராமல் காவல் ஆய்வாளர் பிருந்தா கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன் படி நடத்தப்பட்ட விசாரணையில் காவல் அயவளர் பிருந்தா ரூ.75 ஆயிரம் கையாடல் செய்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் பிருந்தாவை ஆயுதப்படைக்கு இட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women police inspector transfer to armed force in cuddalore