அழகிய மனைவி, ரவுடி பேபியான சம்பவம்.! கூலிப்படை வைத்து கணவன் கொலை.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25ஆம் தேதி யூசுப் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து காரை விட்டு இறங்க சொல்லி அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர் .

அவர்கள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சகாதேவன் என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 

கொலை செய்யப்பட்ட யூசுப்பின் மனைவிதான் கூலிப்படையினரை ஏவி தனது கணவரை கொலை செய்ய வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலை குற்றத்தில் தொடர்புடையதாக சந்துரு, கேசவன், ஆறுமுகம், பித்துக்குளி கார்த்திக் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைக் மற்றும் பட்டா கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women killed her husband in trichy


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->