சட்டமன்ற தேர்தல் 2026; புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் யார்..? நாளை அறிவிப்பு..!
Who will be the TVK candidates contesting in the 2026 Puducherry Legislative Assembly Election
புதுச்சேரி சட்ட மன்ற தீர்த்தம் ஏப்ரல் 09 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (ஞாயிறு) அன்று அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வருகின்றன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ், கூட்டணியை விட்டு வெளியேறி தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது.
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை, என்.ஆர்.காங்கிரஸ், உறுதி செய்து, தொகுதி உடன்பாட்டையும் இறுதி செய்துள்ளது. இந்த என்.டி.ஏ கூட்டணியில் லஜக இணைந்துள்ளது. அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகும் எனத் கூறப்படுகிறது. அதேபோல் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் விசிக 03 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில், தவெக வேட்பாளர்கள் தேர்வு கடந்த 16ஆம் தேதி இறுதி செய்யப்பட்ட நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாள், திங்கட்கிழமை இறுதி நாள் என்பதால், தவெக வேட்பாளர்களை நாளை விஜய் அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் களம் இறங்க தவெக திட்டமிட்டுள்ளது.
English Summary
Who will be the TVK candidates contesting in the 2026 Puducherry Legislative Assembly Election