#மதுரை:: அமைச்சர் உதயநிதி பேசும் பொழுதே கலைந்து சென்ற பெண்கள்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் உள்ள திடலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக பெண்களை அழைத்து வர அரசு பேருந்துகள் பயன்படுத்தியதுடன் தனியார் டெம்போ போன்ற வாகனங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்துவரப்பட்டனர்.

இதன் காரணமாக மதுரை மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் அவசர கால ஆம்புலன்ஸ்களும் நகருக்குள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உதயநிதியின் நிகழ்ச்சிக்காக காலை முதலே திரண்டு இருந்த பெண்களுக்கு குடிநீர், உணவு சரியாக வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு முன்பே சாரை சாரையாக பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த திமுகவினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

உதயநிதி பங்கேற்ற மாநாடு காலி நாற்காலிகள் உடனான மாநாடு போல் அமைந்திருந்ததாக அங்க கூடியிருந்தவர்கள் முனுமுனுத்தனர். உதயநிதி வரப்பதற்காக கட்டியிருந்த கரும்பு, இளநீர், வாழைத்தார்களை யாரும் எடுத்து விடக்கூடாது என அதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு அமைச்சரின் நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரம் முதல் அரசு பேருந்துகள் வரை முடக்கியது மதுரை மக்களை முகம் சுளிக்க வைத்தது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் மேடையில்  பேசுவதற்கு முன்பே நிகழ்ச்சிக்காக வந்திருந்த பெண்கள் கலைந்து சென்றது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women dispersed while Udayanidhi was speaking in madarai


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->