அரசு விழாவில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அதிகாரி - வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.!
woman officer dance in Centenary in Public Service function perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்
சார்பில், 'மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா' கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு, அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் அவர், சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான "வெந்து தணிந்தது காடு" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே... என்ற பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடினார்.
அவரது நடனம் விழாவில் கலந்துகொண்டவர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும் அவருடைய நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
woman officer dance in Centenary in Public Service function perambalur