திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தெக்கலுார் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவருக்கு தந்தை மற்றும் இரண்டு சகோதாரர்களுடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு தாராபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மனவேதனையடைந்த கோவிந்தம்மாள், நீதிமன்ற வளாகத்திற்கு வந்து விஷம் அருந்திவிட்டு, பின்னர் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- “இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஆனால், வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணைய ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை” என்று தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died in tirupur court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->