குரங்கு அம்மை நோய் பரவலை மறைக்கிறதா தமிழக சுகாதார துறை? - Seithipunal
Seithipunal


குரங்குமை நோயினால் பெண் உயிரிழப்பு!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பரிமளா என்பவர் குரங்கு நோயினால் உயிரிழந்ததை சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் மூடி மறைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்பொழுது அப்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பரிமளாவுக்கு கடந்த மாதம் உடலில் பல்வேறு இடங்களில் கொப்புள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கொப்புளங்கள் அதிகமாகவே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வடுகப்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பரிமளாவிற்கு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உடலில் கொப்புளங்கள் அதிகரித்துள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பரிமளா சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளார். 

பரிமளா குரங்கு நோயால் பாதிக்கப்பட்டு அதனால் அவர் உயிரிழந்த அனைத்து தகவல்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவசர அவசரமாக வீட்டுக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்தான தகவல்கள் தற்போது பரவி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அப்பகுதி மக்கள் பரிமளாவிற்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவர் தீவிர சிகிச்சை பெற்று உயிரிழந்தார் என்பது மட்டுமே தெரியும் என்றும் குரங்கு அம்மை நோயால் உயிரிழந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. பேரூராட்சியின் சார்பில் தங்கள் பகுதியில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman death due to monkey disease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->