வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை., கொடூர கணவனை கைது செய்த காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் பிரபாகரன் . இவர் திருச்சியில் உள்ள முத்துலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து  கொண்டார்.

தற்போது, முத்துலெட்சுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து சார் ஆட்சியர் விசாரணைக்கு காவல்துறையினர் பரிந்துரைத்தனர். இந்த விசாரணையில் முத்துலெட்சுமிக்கு கணவன் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை அளித்துள்ளனஎ என்பதும்  இதனால் அவர் தற்கொலை செய்து கொண்தும் தெரியவந்தது.          

இதனை அடுத்து, தற்கொலை வழக்கை வரதட்சனை கொடுமை வழக்காக மாற்றி அவரின் கணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman Committed suicide due to dowry Near Theni


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->