மேட்ரிமோனியல் நடந்த விபரீதம்.. காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றிய நபர்.. துடைப்பத்தால் அர்ச்சனை செய்த பெண்.!! - Seithipunal
Seithipunal


திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் தன்னுடைய விவரங்களை பதிவு செய்து வரன் தேடியுள்ளார். அப்போது மேட்ரிமோனி மூலம் கோகுல் கிருஷ்ணன் என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். இந்த பழக்கம் திருமணப் பேச்சு ஆக மாறியது.

அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கோகுல் கிருஷ்ணா நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை திருமணம் செய்துள்வதாக நம்பவைத்து சுமார் 1.25 லட்சம் பணத்தை பல்வேறு காரணங்களால் கூறிய பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளார். இதற்கிடையே திருமணத்தை தாமதமாக்கி வந்த அந்த இளைஞன், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்கும் வேறு ஒரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கூறி விளக்கியுள்ளார்.

இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வருமாறு அப்பெண் கோகுல் கிருஷ்ணருக்கு அழைப்பு விடுத்துள்ளார். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த கோகுல் கிருஷ்ணாவிடம் திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த இளம் பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட அப்பெண்ணின் உறவினர்கள் கோகுல் கிருஷ்ணன் வீட்டில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

கோபம் தீராத அந்த பெண் வீட்டிலிருந்து துடைப்பத்தை கொண்டு கோகுல் கிருஷ்ணாவை அடி அடி என அடித்து உள்ளார். இதனை உறவினர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். மேலும் இளம் பெண்ணை ஏமாற்றிய கோகுல் கிருஷ்ணாவை கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்றுள்ளதால், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க காவல்துறையினர் அறிவுறுத்தினார். கோகுல் கிருஷ்ணா மீது குமார் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இளம் பெண் தாக்கியதில் காயமடைந்த கோகுல் கிருஷ்ணா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman beating a man to cheat


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal