இன்னும் திரும்ப வராத பலகோடி ரூ.2,000 நோட்டுகள்.. மத்திய அரசு மீண்டும் வாய்ப்பு வழங்குமா?
Will the central government provide another chance for the many 2000 rupee notes that have not yet returned?
1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
,
கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெற்றது.இதையடுத்து பல கட்டங்களாக ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.இதில் மீதமுள்ள ரூபாய் நோட்டுகளை சடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது.இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் தகவல்படி, 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதியன்று ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த ஜூலை 31-ந்தேதியன்று ரூ.6,017 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்தநிலையில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. பர்துருஹரி மெஹ்தாப், மக்களவையில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்பாக சில கேள்விகளை கேட்டிருந்தார்.அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அதாவது 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
English Summary
Will the central government provide another chance for the many 2000 rupee notes that have not yet returned?