காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஊர்வதிற்கு அனுமதிக்கும் போது தமிழகத்தில் மறுப்பது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் அக்டோபர் 18, 25 அல்லது நவம்பர் 1-ஆம் தேதிகளில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. எந்தப் பதிலும் கிடைக்காததால், ஆர்எஸ்எஸ் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்
நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதம்: "ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டும், உச்ச நீதிமன்றம் அதனை உறுதி செய்தும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்குத் தமிழகக் காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது" என மூத்த வழக்கறிஞர் என்.எல். ராஜா வாதிட்டார்.

காவல்துறை தரப்பு வாதம்: "ஊர்வலத்திற்கு 21 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் அக்டோபர் 3-ஆம் தேதிதான் விண்ணப்பிக்கப்பட்டது. மேலும், குறுகிய வழித்தடங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டது" என அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

நீதிபதியின் கடுமையான கேள்விகள்
வாதங்களைக் கேட்ட நீதிபதி தெரிவித்ததாவது:

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் தவெக ஆட்சியில் திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த ஜம்மு காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் போது, அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? இத்தகைய மறுப்புகள் மூலம் அரசு தேவையற்ற விளம்பரத்தையே ஏற்படுத்தித் தருகிறது."

இதனைத் தொடர்ந்து, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மனுதாரர் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த நாளுக்கு (அக். 15) ஒத்திவைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Refuse RSS Procession in TN When Allowed in JK Madras HC Questions State Government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->