மாணவிகள் சாணி பவுடர் குடித்தது யாரின் தவறு...? - ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கடுமையான மோதல்
Whose fault it that students drank dung powder Teachers and parents fierce clash
பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. பள்ளிக்கு வந்த மாணவிகள் மூவரை ஆசிரியர்கள் கண்டித்ததாகத் தெரிகிறது.
அதனால் மனஉளைச்சலில் ஆழ்ந்த மாணவிகள் மூவரும் திடீரென சாணி பவுடர் கரைசலை குடித்து உயிரிழக்க முயன்றனர்.அங்கு சிறிது நேரத்தில் அவர்கள் வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவசரமாக கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.இதற்கிடையில் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்களும் உறவினர்களும், “எங்கள் குழந்தைகள் தவறு செய்திருந்தால் எங்களிடம் சொல்லியிருக்கலாம்; நேரடியாக திட்டியதால் தான் இப்படி நடந்துள்ளது” என ஆசிரியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக மாறியது.
English Summary
Whose fault it that students drank dung powder Teachers and parents fierce clash