பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகளின் கதி என்ன? சீருடையை கைப்பற்றி போலீஸ் விசாரணை... - Seithipunal
Seithipunal


கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில்  எட்டாம் வகுப்பு படித்து வரும் 3 மாணவிகள்  நேற்று காலை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து  மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது,  மூன்று மாணவிகளும் பள்ளியிலிருந்து  சென்றுவிட்டதாகக்  பள்ளி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பல இடங்களிலும் மாணவிகளின் பெற்றோர்  தேடிப் பார்த்தபோது,  பள்ளிக்கு அருகில் மூன்று மாணவிகளின் சீருடைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக  அருகில் இருந்தவர்களிடம்விசாரித்த போது, தங்களது பெற்றோர்களுக்கு பிறந்தநாள் மாற்று உடை உடுத்தி சீருடைகளை அங்கேயே விட்டுச்சென்றுள்ளது தெரியவந்தது. 

இது குறித்து கரூர் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகாரளிக்க, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த தொடர்பான விசாரணையில், 3 மாணவிகளும் ஒரு மினி பேருந்தில் சென்றுள்ளது  தெரியவந்துள்ளது. 

ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள்?  எதற்காக சென்றார்கள்? 
என்ற விவரம் தெரியாததால் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். 

மூன்று மாணவிகள்  காணாமல் போனது கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the fate of the 3 girls who went to school? Tension in Karur...


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->