"பெண்களுக்கு 50% அதிகாரம்; கல்விப்புரட்சி, போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் : தவெக கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதிகள்!
Vijays Vision for TN Safety Education and Systemic Reforms
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தனது வருங்கால ஆட்சி நிர்வாகம் குறித்த தொலைநோக்குத் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
பெண்களுக்கான பாதுகாப்பு & அதிகாரம்:
முதலிடம்: பெண்களின் பாதுகாப்பே எங்களது ஆட்சியில் மிக முக்கியமான முன்னுரிமையாக இருக்கும்.
நிர்வாகப் பகிர்வு: மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) பதவிகளில் 50% பெண்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளோம்.
சுகாதாரம்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்குக் கதவுகளுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உறுதி செய்யப்படும்.
மருத்துவ வசதி: மலைக் கிராமங்களில் பிரசவ வசதியுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு புரட்சி:
பாடத்திட்ட மாற்றம்: போட்டித் தேர்வுகளுக்காகப் லட்சங்களைச் செலவழித்துத் தனியாகப் படிக்கத் தேவையில்லை; அரசுப் பாடத்திட்டமே மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.
நடைமுறைப் பாடங்கள்: அரசியலமைப்புச் சட்டம், அரசு மற்றும் வங்கி அலுவலகங்களை அணுகும் முறைகள் பள்ளிப் பாடங்களிலேயே சேர்க்கப்படும்.
முதல் தரக் கல்வி: அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்படும்.
சமூகம் மற்றும் கட்டமைப்பு:
நல வாரியங்கள்: ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கெனத் தனித்தனியாகப் பிரத்யேக நல வாரியங்கள் உருவாக்கப்படும்.
தொழில் வளர்ச்சி: தென் தமிழகம் உள்ளிட்ட தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைக்கத் தனி கவனம் செலுத்தப்படும்.
போக்குவரத்து: பேருந்து வசதியே இல்லாத கிராமம் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்படும்.
போதை ஒழிப்பு: போதைப்பொருட்கள் இல்லாத தமிழகமே எங்களது இறுதி இலக்கு.
விஜய்யின் வாக்குறுதி: சட்டம் ஒழுங்கு மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் குரல் கேட்டு அவர்களுக்கான திட்டங்கள் காலத்திற்கேற்ப உருவாக்கப்படும்.
English Summary
Vijays Vision for TN Safety Education and Systemic Reforms