கடல் சீற்றம்; தனுஷ்கோடி- அரிச்சல் முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!
Warning issued to tourists visiting Dhanushkodi and Arichal Munai due to rough seas
தமிழகத்தின் தென் கோடி மாவட்டங்களில் சுற்றுலாவிற்கு பிரசித்தி பெற்ற மாவட்டங்களில் ராமநாதபுரம் முக்கியம் வாய்ந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் பல இடங்கள் ஆன்மீக சுற்றுலா தளத்திற்கு முக்கியமானது.
பொதுவாக ராமநாதபுரம் செல்பவர்கள் தனுஷ்கோடி செல்லாமல் திரும்புவதில்லை. இந்நிலையில் தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
தனுஷ்கோடி ராமேசுவரத்தில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து 05 கி.மீ தொலைவில் அரிச்சல் முனை உள்ளது. தனுஷ்கோடியைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளும், அரிச்சல் முனையில் புனித நீராட பக்தர்களும் இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனுஷ்கோடியில் தெற்கு மன்னார் வளைகுடா கடற்பகுதி சீற்றமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி - அரிச்சல் முனை தேசிய நெடுஞ்சாலையில் கடல் அரிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்பு வேலி கற்கள் சாலையில் சிதறி கிடப்பதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றினால் தனுஷ்கோடி, முகுந்த ராயர் சத்திரம், அரிச்சல் முனை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாரு அறிவிப்பு வரை குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
English Summary
Warning issued to tourists visiting Dhanushkodi and Arichal Munai due to rough seas