தமிழகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு சூறாவளி...! 99% வீடுகளுக்கு படிவம் சென்றடைந்
Voter registration whirlwind Tamil Nadu Forms reach 99percentage households
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கியதும், மாநிலம் முழுவதும் தேர்தல் சூழல் மீண்டும் உயிர் பெற்றது. இந்த statewide ஆப்பரேஷனில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தோறும் சென்று வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

அக்டோபர் 27 நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்களுக்காக அதே எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்ட படிவங்களில் 6,35,99,698 படிவங்கள், 99.20% ஏற்கனவே மக்களிடம் சென்றடைந்துவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வெறும் விநியோகம் மட்டும் இல்லை; திரட்டப்பட்ட படிவங்களும் வேகமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை 5,86,57,184 படிவங்கள், 91.49% online-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் பணிகள் சகாப்த வேகத்தில் முன்னேறுகின்றன. அங்குள்ள 10,21,578 வாக்காளர்களுக்காக, 962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக பணியாற்றி வருகின்றனர்.
வழங்கப்பட்ட படிவங்கள் 10,16,423 , 99.50%, இதில் 9,61,500 , 94.12% ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
English Summary
Voter registration whirlwind Tamil Nadu Forms reach 99percentage households