நாடு முழுவதும் வாக்காளர்  திருத்தம்  பணி ?- தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு!  - Seithipunal
Seithipunal


எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

இந்தியாவில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது பீகாரில் மேற்கொள்ளப்பட்ட இந்த  சிறப்பு தீவிர வாக்காள பட்டியல் திருத்தப் பணியின்போது சுமார் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 பா.ஜ.க.வுக்கு உதவுவதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளர் குறித்த தரவுகளில் மோசடி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனிடையே,  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மாநிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voter correction work across the country? A shocking decision made by the Election Commission


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->