#சற்றுமுன்: சசிகலா விடுதலை.. தலையாட்டிய பாஜக.. அரசியல் மாற்றம்?..!! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

தற்போது சசிகலா 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் வெளிவரவில்லை. தற்போது கொரோனா காலத்தில் சிறைக்குள் இருந்தபடியே சசிகலாவும் பல்வேறு அரசியல் திட்டங்களைப் போட்டு வருவதாகச் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நரசிம்ம மூர்த்தி என்பவர் கர்நாடக சிறைத்துறையில் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என கேட்டறிந்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை சசிகலாவின் தண்டனை காலத்தை கணக்கிடுவது பல்வேறு நடைமுறைகள் உள்ளது. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதால் அவருடைய விடுதலை தேதியில் மாற்றம் இருக்கலாம் என கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும் செப்டம்பர் 15 ஆம் தேதி மேல் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறிய நிலையில், டெல்லி பாஜக தலைமை மூலம் சசிகலாவிடம் அரசியல் விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 14 ஆம் தேதியில் சசிகலா விடுதலை என பாரதிய ஜனதா கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VK Sasikala Release August 14 th


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal