ஏன் தடை விதிக்கக் கூடாது? நடிகர் விஷாலை விளாசிய உயா்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை அவகாசம் வழங்கியும் திருப்பி தராததால் திரைப்படத்தில் நடிப்பதற்கு தடை விதிப்பில் என்ன தவறு உள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக நடிகர் விஷால் சினிமா பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21 கோடி 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் திருப்பி செலுத்தியது. 

இதனால் விஷால் பட நிர்வாகத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனை விஷால் மீறியதால் லைகா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நடிகர் விஷால் ரூ. 15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூ. 15 கோடியை விஷால் இதுவரை திருப்பி செலுத்தவில்லை. மேலும் திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருவாயை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நடிகர் விஷால், படத்தில் நடிகராக மட்டுமே நடித்துள்ளதாகவும் அனைத்து படங்களும் எதிர்பார்த்த வசூலை தராததால் பணம் கொடுக்க முடியவில்லை'' எனவும் தெரிவித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்தில் பணம் கொடுக்க தயாராக இல்லை என்றால் நடிகர் விஷாலுக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு தடை விதிப்பதில் என்ன தவறு உள்ளது என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal not acting movies Madras High Court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->