நாய்களுக்குள் தகராறு.. விலக்கிவிட சென்றதால் சம்பவம்.. அரங்கேறிய கொலை..! தந்தை, மகன்கள் கைது.! - Seithipunal
Seithipunal


நாயை அடித்துக்கொலை செய்த தந்தை மற்றும் 2 மகன்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் முனியசாமி. இதே பகுதியை சார்ந்தவர் நாகராஜ். இவர்கள் இருவரும் தங்களின் வீட்டில் நாயை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி இவர்களின் நாய்கள் சண்டையிட்டுள்ளது. 

இந்த சண்டையை கண்ட நாகராஜ் நாய்களை விலக்க சென்ற போது, முனியசாமியின் நாய் நாகராஜை கண்டித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் மற்றும் அவரது 2 மகன்கள், முனியசாமியின் நாயை மரக்கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்கி இருக்கின்றனர். 

இதனால் முனியசாமியின் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, முனியசாமி நாகராஜ் மற்றும் அவரது மகன்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் புகாரை எழுதிவாங்கிவைத்து அனுப்பிவிட்டு வழக்குபதியாமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, முனியசாமி இது குறித்து விலங்கின பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்து புகார் அளிக்கவே, அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இதன்பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நாகராஜ் மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar Kottaipatti Dog Murder by Father and Sons Police Arrest 3 of Them


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal