டிக் டாக் காதல்.. ஒருவருடத்தில் தோல்வி.! 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை..! - Seithipunal
Seithipunal


சாத்தூர் அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வெம்பக்கோட்டை பகுதியை சார்ந்தவர் அழகு (வயது 19). அழகு அங்குள்ள கல்லூரியில் பொறியியல் முதல் வருடம் பயின்று வந்துள்ளார். கல்லூரியில் பயின்று வந்த அழகு, நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், அழகுக்கு அதே ஊரை சார்ந்த பள்ளி படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலித்த பெண்மணி கடந்த சில நாட்களாக காதலை நாம் தவிர்த்துவிடலாம் என்று கூறியுள்ளார். 

இதனால் மன வருத்தமடைந்த அழகு வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அழகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், விசாரணையில் அழகு இறப்புக்கு முன்னதாக தனது அலைபேசியில் வீடியோ பதிவு செய்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த வீடியோவில், நான் சிவகாசி வெம்பக்கோட்டையை சார்ந்த அழகு. நானும் - அவளும் கடந்த 1 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். இன்று ஏதேதோ காரணத்தை கூறி என்னை காதலிக்க மறுக்கிறார். 

அதனால் எனக்கு தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை. நான் இறந்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். 

ஆணோ பெண்ணோ படிக்கும் வயதில் காதல் தேவையற்றது. படிக்கும் வயதில் காதல் என்ற மாய வலையில் சிக்கி, தங்களின் விலைமதிப்பற்ற உயிரை துறந்து, உங்களை அன்போடு வளர்த்த பெற்றோருக்கு பெரும் சோகத்தை தந்துவிட்டு செல்ல வேண்டாம். உங்களின் வீட்டில் உங்களுக்கு அண்ணா, தம்பி, தங்கை என யார் இருந்தாலும் உங்களின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sathur Tic Tok Famous Alagu Suicide due to Love Failure 10 June 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal