கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்... இறங்கும் பொது நடந்த பெருந்துயரம்!
viralimalai social activist Temple Tower national flag accident
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கொடும்பலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம், விராலிமலை முருகன் கோவிலின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கையுடன் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஆண்டு, இந்த கோரிக்கைக்காக விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தபோது, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர்.
இன்று அதிகாலை, சுதந்திர தினத்தன்று, சுமார் காலை 5 மணியளவில், அவர் விராலிமலை முருகன் கோவிலின் ராஜகோபுர உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார். அங்கு நின்றவாறு, கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச வேண்டும் என்று கோஷமிட்டார்.
இந்த தகவலை அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, காவல் ஆய்வாளர் லதா மற்றும் இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க தீயணைப்புத்துறை பணியாளர்கள் கோபுரத்தில் ஏறியபோது, அவர் தானாகவே இறங்குவதாக தெரிவித்தார். ஆனால் இறங்கும் முயற்சியின் போது திடீரென தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர், கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கும்போது ஏற்பட்ட இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
English Summary
viralimalai social activist Temple Tower national flag accident