விழுப்புரம் : புளியமரத்துக்கு முட்டுக்கொடுத்து மோதிய அரசு பஸ்.! குறுக்கே வந்த பசுக்கள்., 10 பேருக்கு காயம்.! - Seithipunal
Seithipunal


திருக்கோவிலூர் அருகே சாலையின் நடுவே திரிந்த இரண்டு பசு மாடுகளால், தமிழக அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே சாலையின் நடுவே வந்த இரண்டு பசு மாடுகள் சாலையின் குறுக்கே வந்ததால்,  அரசு பேருந்து ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரத்திற்கும், பள்ளிபாளையத்தில் இருந்து விழுப்புரத்திற்கும் இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது கானை பகுதியில், சாலையின் குறுக்கே இரண்டு பசுமாடுகள் வந்ததால், அரசு பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நடுவிலேயே நிறுத்தினர்.

அப்போது பின்னல் வந்த அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. 

ஒன்றன் பின் ஒன்றாக இரு அரசு பேருந்துகளும் வரே, பின்னல் வந்த பேருந்து முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்து இருப்பது, வெளியான சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது தெரிகிறது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது, மேலும் பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயம் அடைந்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VILUPURAM KAANAI BUS ACCIDENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->