மதுரை திருமங்கலம் அருகே பரபரப்பு: டவுன் பஸ்ஸை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்கள்: போக்குவரத்து பாதிப்பு..!
Villagers blocked the road by blocking the town bus near Thirumangalam Madurai district
மதுரை திருமங்கலம் அருகே, டவுன் பஸ்சை சிறை பிடித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே புங்கன்குளம் கிராமத்திற்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து காலை, மாலை என இருவேளை டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பஸ் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு திருமங்கலத்தில் இருந்தே புங்கன்குளத்திற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த கிராம மக்கள் 02 பஸ் மாறி மதுரை பெரியார் பஸ் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இந்த கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். புங்கன்குளம்-பெரியார் பஸ் நிலையம் இடையே மீண்டும் பஸ் சேவையை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால், புங்கன்குளம் கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கிராம மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு இன்று காலை வாகைக்குளம்-திருமங்கலம் ரோட்டில் புங்கன்குளம் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் திருமங்கலத்தில் இருந்து வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்ட்டுள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு 01 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Villagers blocked the road by blocking the town bus near Thirumangalam Madurai district