புலி நடமாட்டத்தால் அச்சம் – புலியை பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவிப்பு..!  
                                    
                                    
                                   Villagers announce that the struggle will continue until the tiger is captured in Nilgiris 
 
                                 
                               
                                
                                      
                                            இரவு நேரங்களில் புலியின் நடமாட்டம் இருப்பதால் கூடலூர் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், புலியை பிடிக்ககோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் என்ற கிராமம் உள்ளது. இங்கு பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக புலி ஒன்று பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கால்நடைகளை கொன்று வருகிறது. இதனால், அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். புலியை பிடிக்க கோரி பொதுமக்கள் வனதுறைக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என்று பொதுமக்கள் கூறினர். இந்நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் புலி விரைவில் பிடிப்படும் என்று வனதுறையினர் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் புலியை பிடித்தால் மட்டுமே போராட்ட்த்தை கைவிடப்போவதாக மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில்: ஊருக்குள் வரும் புலியின் வயது 12 இருக்கும். வயதாகிவிட்டதால் அதனால் வேட்டையாட முடியாது. அது கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. மனிதர்களை தாக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் புலியை பிடித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட போவதாக கிராம மக்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Villagers announce that the struggle will continue until the tiger is captured in Nilgiris