ஐசரி கணேஷின் மகள்-மருமகனுக்கு விருந்து வைக்கும் விஜய்.!!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கும், அதன்பின் நடைபெற்ற திருமண வரவேற்பிற்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பங்கேற்று இருந்தனர். 

இந்தத் திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், அவருடைய கட்சி சார்பாக ஆதவ் அர்ஜூனா வந்திருந்தார். 

இந்தத் திருமண வரவேற்பில் சுமார் 25,000 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் நகர கூட முடியாமல் அனைவரும் தவித்துள்ளனர். இந்த விஜயும் வந்தால் இன்னும் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தினால் தான் அவர் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது வீட்டில் ஒரு நாள் ஐசரி கணேஷின் மகள்- மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay special feast to ishari gansesh daughter and son in law


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->