விஜயின் அரசியல் குழந்தைத்தனமாக உள்ளது – உதயநிதியை எதிரியாக பார்க்கிறார்!விஜய்யால் யாரையும் சமமாக பார்க்க முடியாது.. எஸ்வி சேகர் பேட்டி!
Vijay politics are childish he sees Udhayanidhi as an enemy Vijay cannot see anyone as an equal SV Shekhar interview
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை தன்னுடைய பிரதான எதிரியாக தவெக தலைவர் விஜய் பார்க்கிறார் என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த பின்னர், ஒரு மாதமாக பொதுவெளியில் தலைகாட்டாத விஜய், சமீபத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தன் வீட்டிலிருந்தே மரியாதை செலுத்தினார். இதை ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ அரசியலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து எஸ்.வி. சேகர் கூறியதாவது:“கரூரில் உயிரிழந்தவர்களின் உடல்களை பனையூருக்கு கொண்டு வரச் சொல்லாமல் இருந்தது விஜய்யின் நல்ல மனதை காட்டுகிறது. அதற்காக அவரை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் சங்கவி என்ற பெண் சுயமரியாதையுடன் விஜய்யின் நிதி உதவியை திருப்பி அனுப்பியிருப்பதும் பெருமைக்குரியது,” என்றார்.
அதே சமயம் கடுமையாக விமர்சித்த அவர்,“விஜய் வீட்டுக்குள் இருந்தே அரசியல் செய்கிறார். நாளை எம்எல்ஏ ஆகிவிட்டால், சட்டசபையும் பனையூரில் நடத்துவாரா? இது குழந்தைத்தனமான அரசியல். சினிமா நடிகர் என்ற மேக் அப்பை இன்னும் அகற்றவில்லை. விஜய்யால் எந்தக் கூட்டணியையும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் யாரையும் சமமாக பார்க்கும் மனப்பக்குவம் அவரிடம் இல்லை,” என்றார்.
மேலும், “விஜய் சென்றால் கூட்டம் வருமென்றால், பனையூருக்கும் கூட்டம் வரவேண்டும் அல்லவா? ஆனால் அஜித் மரணத்தின்போது விஜய் சென்றபோது கூட்டம் ஏன் வரவில்லை? அனிதா குடும்பத்தைச் சந்தித்தபோதும் கூட்டம் இல்லை. விஜய் விருப்பப்பட்டால் தான் கூட்டம் வரும். உதயநிதியை அவர் தனது எதிரியாகவே பார்க்கிறார். அதனால் ஏற்பட்ட விளைவே கரூர் சம்பவம்,” என சுட்டிக்காட்டினார்.
அதிமுக, பாஜக, தவெக ஆகியவை கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காது என்றும், டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.
அத்துடன், “இந்த கூட்டணி இப்படியே நீடித்தால் திமுக ஏழாவது முறையாக ஆட்சிக்கு வரும்,” என அவர் வலியுறுத்தினார்.
English Summary
Vijay politics are childish he sees Udhayanidhi as an enemy Vijay cannot see anyone as an equal SV Shekhar interview