அரசியலில் தொட்டில் குழந்தை விஜய்! சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் விஜய் - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
Vijay is a cradle child in politics Vijay speaks like a child Rajendra Balaji criticizes
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
“அரசியலில் தொட்டில் குழந்தையான தவெக தலைவர் விஜய், சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்.”“அதிமுகவை பற்றி சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் அனைவரும் பின்னர் அடையாளம் தெரியாமல் போனார்கள். அது தான் வரலாறு.”
“31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுகவை குறைத்து மதிப்பிடுவது, விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படியாகும்.”“தவெக தலைவர் விஜய்க்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு, அவரது பேச்சில் எங்கும் தெரியவில்லை.”
“மதுரையில் விஜய் பேசிய உரைகள், சிலர் எழுதிக்கொடுத்த வசனங்களே. அதை மேடையில் வாசித்து நடித்துவிட்டு சென்றுள்ளார்.”இவ்வாறு, விஜயின் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
English Summary
Vijay is a cradle child in politics Vijay speaks like a child Rajendra Balaji criticizes