தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதாக முடிவு எடுத்து இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் அறிவித்ததோடு தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டியுள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களாக அரசியல் நடிகர் விஜய் வருவார் என அவரது ரசிகர்கள் இயங்கி காத்திருந்த சூழலில் இன்று வெளியான அறிவிப்பு தமிழக முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, சேலம், ராமநாதபுரம், வேலூர், மதுரை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தனர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay fans celebrate political party registration


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->