கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று ( செப்-12) முதல் விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி), பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இந்த நிலையில், அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Bachelor of Veterinary Science & Animal Husbandry - B.V.Sc & AH (5 ஆண்டுகள்),
B.Tech., Food Technology (4 ஆண்டுகள்),
B.Tech., Poultry Technology (4 ஆண்டுகள்),
B.Techm, Dairy Technology (4 ஆண்டுகள்) என்ற 4 வகையான படிப்புகளில் சேர https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் இன்று (செப்டம்பர் 12-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Veterinary medicine college apply from today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->